ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது - டிடிவி தினகரன்
ADMK
Edappadi K. Palaniswami
O. Panneerselvam
By Thahir
வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக பிரிந்து உள்ளனர்.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி. நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் எதிர்க்கட்சி.
எங்களை மதிக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் என தெரிவித்துள்ளார்