அதிமுகவில் இணைய தயார்; எந்த கண்டிஷனும் இல்லை - ஓபிஎஸ் பளீச்!
அதிமுகவில் இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதிமுக
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில்,
மதுரையில் செப்டம்பர் 4ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஓபிஎஸ் விருப்பம்
அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் இணைவதற்கு இபிஎஸ் ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
மதுரையில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மாநாடு நடைபெறும். அது வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் இன்றுவரை நன்றாக இருக்கிறது. வருங்காலங்களில் அவரது அரசியல் முடிவுகள் ஜனநாயக ரீதியில் இருக்கிறதா என்பதை பார்த்து அவருக்கு எங்களின் தார்மீக ஆதரவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.