2021ல் இரட்டை இலை; 2026ல் உதயசூரியன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 27ம் தேதி தனது மகன் ரவீந்திரநாத்வுடன் திமுகவில் இணைந்தார்.
இவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியிலும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் மூவரும் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட பட்டியலில் மூவருக்கும் அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் இந்த முறை போடிநாயக்கனூரில் விடி நாராயணசாமி, ஒரத்தநாடு தொகுதியில் எம்.சேகர், ஆலங்குளம் தொகுதியில் கே.ஆர்.பி பிரபாகரன் போட்டியிடுகின்றனர்.
