பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்; சசிகலாவுக்கு.. டிடிவி தினகரன் ஆவேசம்

BJP V. K. Sasikala O. Panneerselvam TTV Dhinakaran
By Sumathi Jun 07, 2025 08:30 AM GMT
Report

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி

மதுரையில் அமமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த செயல்வீரர்களுடன் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்; சசிகலாவுக்கு.. டிடிவி தினகரன் ஆவேசம் | Ops Important For Bjp Alliance Says Ttv Dhinakaran

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவினர் ஓரணியில் இணைய வேண்டும். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு அனைத்து முக்கியத்துவமும் தரப்படுகிறது அதிமுக மீட்பு என்ற பின்புலத்தில் சசிகலா செயல்படுகிறார்.

கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்

கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்

டிடிவி உறுதி

தேர்தல் நேரத்தில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடரும்.

ttv dhinakaran

தீயசக்தி திமுகவை வீழ்த்த, அனைத்து கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.