எதிர்க்கட்சி இருக்கை விவகாரம்! ஒரே போடாக போட்ட ஓபிஎஸ் தரப்பு!!! கலக்கத்தில் இபிஎஸ்!!
எதிர்க்கட்சி இருக்கை விவகாரம்! ஒரே போடாக போட்ட ஓபிஎஸ் தரப்பு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தங்கள் சார்பில் புதிய எதிர்க்கட்சி துணை தலைவர் நியமிக்கப்பட்டுள்தாகவும் கூறி, ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அப்பதவியில் இருந்து நீக்க கோரி, அவர் இதுவரை பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும்
ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ'வான சுப்புரத்தினம் சார்பில் இந்த கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில், எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் கல்வித் தகுதியையும், சொத்துக்களையும் மறைத்தது தவறான நடத்தை மட்டுமல்லாமல் என குறிப்பிட்டு ஊழல் நடவடிக்கையும் கூட என குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களை மறைத்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு, சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் ஆகவே எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.