எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்பில்லை...ஜெயக்குமார் பேட்டி

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam D. Jayakumar
By Thahir Feb 07, 2023 07:33 AM GMT
Report

திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொள்கிறார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக புகார் மனு 

தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

ops-eps-unlikely-to-meet-jayakumar

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை. இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக எதுவும் நடக்கலாம் என கு.ப.கிருஷ்ணன் கூறி இருந்த நிலையில் இது குறித்து ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

ஓபிஎஸ் சின்னத்தை முடக்க முயற்சிக்கிறார் - ஜெயக்குமார் 

மேலும் ஜெயக்குமார் கூறுகையில், இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொள்கிறார். ஆனால் அவரால் இரட்டை இலையை முடக்க முடியவில்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு என விமர்சித்துள்ளார்.