பிரதமருடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சந்திப்பு!
pm
meet
delhi
ops
eps
By Anupriyamkumaresan
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசி வருகின்றனர்.
பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் சூழல், கட்சி விவகாரங்கள் குறித்து பிரதமருடன் இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு பின் முதல்முறையாக இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றனர். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.