ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., பிரதமருடன் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று காலை சந்திக்கின்றனர்.
இன்று காலை 11.05 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்கிறது. இதற்காக நேற்று காலையிலேயே புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றடைந்தார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றனர்.

தமிழக அரசியல் சூழல், கட்சி விவகாரங்கள் குறித்து பிரதமருடன் இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பின் முதல்முறையாக இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்கள். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம்
கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.