சசிகலா குறித்து ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் முடிவு - முன்னாள் அமைச்சர் சொன்ன பதில்!
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வளைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்தது.
அதிமுகவினரை மீண்டும் வந்து சந்திக்க இருப்பதாக சசிகலா தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசிய ஆடியோ தான் அது. இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்து கலந்துரையாடினர். அதில் சசிகலா விவகாரம் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சசிகலா குறித்து எந்த முடிவானாலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் இணைந்து தான் எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சசிகலா சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. அதனால் அதிமுகவில் அவரால் உரிமை கொண்டாட முடியாது. கட்சியின் எந்த முடிவாக இருந்தாலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் சேர்ந்து தான் எடுப்பார்கள்.
திமுக ஆட்சியில் அமர்ந்து 30 நாட்கள் தான் ஆகியுள்ளது. 30 நாட்களுக்குள் விமர்சிப்பது எதிர்க்கட்சிக்கு அழகல்ல” என்றார்.