வேலைய விட்டுட்டு போனேனா? ஓபிஎஸ் டிரைவர் கொடுத்த விளக்கம்
ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது டிரைவர் வேலையை விட்டு சென்றுவிட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் டிரைவர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபராக வலம் வந்தவர் ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்துள்ளார்.
ஜெயலலிதா அவர்களின் இறப்புக்கு பின்னர் உட்கட்சி மோதல் காரணமாக தனியாக செயல்பட ஆரம்பித்தார், அதிமுக-வில் மீண்டும் இணையலாம் என தூது அனுப்பிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார், அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.

திமுக-வில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவர் வேலையை விட்டு சென்றுவிட்டார் என சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இதுகுறித்து பேசியுள்ள டிரைவர், அண்ணா அறிவாலய வளாகத்தில் காரை நிறுத்தினோம், அப்போது காரில் இருக்கும் பூச்செண்டுவை எடுக்க ஓபிஎஸ் கூறினார், அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் நான் சட்டென இறங்கி எடுத்துக்கொடுத்தேன். அதை யாரோ வீடியோவாக எடுத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
நான் சாதாரண ஓட்டுநர், நான் தான் தலைவர் ஓபிஎஸ் அவர்களை விமான நிலையம், பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றேன், ஏன் என்னுடைய பிழைப்பில் மண்ணை அள்ளி போடுறீங்க, நான் ஐயாவை விட்டு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
