ஓபிஎஸ்-க்கு நாட்டு நடப்பு தெரியவில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஓபிஎஸ்-க்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டு நடப்பு தெரியாத ஓபிஎஸ்
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம் மருத்துவக்கல்லுாரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அவருக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
அமைச்சர் விளக்கம்
அத்தியாவசிய மருந்துகள் இல்லை என்று அவர் பொதுவாக கூறுகிறார். அவ்வாறு எங்கு இல்லை எனக்கூறினால், அங்கு உடன் அனுப்ப தயாராக உள்ளோம். இதுவரை, எங்கும் புகார் வரவில்லை.
எந்த மருத்துவமனையில், எந்த மருந்து இல்லை என பன்னீர்செல்வம் கூறினால், உடனடியாக அம்மருந்தை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், எசன்சியல் டிரக் என 300க்கும் மேற்பட்ட மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் கையிருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.