நான் தவெகவில் இணையவில்லை - ஓபிஎஸ் அதிரடி மறுப்பு

Tamil nadu O. Panneerselvam TVK
By Vinoja Jul 30, 2026 08:34 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து செய்தியளர் ஒருவர் அவரிடம் விளக்கம் கேட்டபோது, அந்த தகவல்களை ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நான் தவெகவில் இணையவில்லை - ஓபிஎஸ் அதிரடி மறுப்பு | Ops Denies Rumours Of Joining Tvk

ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு 

இது குறித்து பேசிய அவர், “நான் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. ஒரு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மற்றொரு கட்சியில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.

இந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதன் மூலம் தவெகவில் இணைவது தொடர்பாக வெளியான தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.