அதிமுக பொதுக்குழுவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - உச்சநீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் முடிவு

AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Sep 02, 2022 09:05 AM GMT
Report

ஜுலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

பொதுக்குழு கூட்டம் தீர்ப்பு 

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி ப்ழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும்.

அதிமுக பொதுக்குழுவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - உச்சநீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் முடிவு | Ops Decision To Approach Supreme Court

ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது என கூறினார்.

தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன.

இதனால் ஓ பன்னீர்செல்வத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி நீக்கியது செல்லும். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும். என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 

அதிமுக பொதுக்குழுவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு - உச்சநீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் முடிவு | Ops Decision To Approach Supreme Court

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு ஆதரவாக வந்த தீர்ப்புக்கு எதிராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.