சசிகலா விவகாரம் : ஓபிஎஸ் தவறாக எதுவும் சொல்லவில்லையே - ஜே.சி.டி.பிரபாகர்

sasikala aiadmk AIADMKOfficial
By Irumporai Oct 27, 2021 09:54 AM GMT
Report

 சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்துத்தான் முடிவு செய்வோம் என செய்தியாளர்கள் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக உள்ள ஜே.சி.டி.பிரபாகர்  செய்தியாளர்களை  சந்தித்தபோது:

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடித்தான் முடிவை எடுப்பார்கள் என்றுதான் ஓபிஎஸ் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கிறது.

அதிமுக தொண்டர்களின் கட்சி. ஓபிஎஸ் கூறியதில் தவறு இல்லை. ஓபிஎஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கே.பி.முனிசாமியின் கருத்தால் தென் மாவட்டங்களில் சிலர் வேதனையடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவைச் சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தொடர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி ஆதரவாளர்கள் எதிர்த்து வரும் நிலையில்  கடந்த சில நாட்களாக  இருதரப்புக்கும் இடையே  கருத்து மோதல் வலுத்து வருகிறது.