“வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு.. தர்மயுத்தம்” - மன வேதனையுடன் பேசிய ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது அரசியல் வாழ்க்கையைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், சசிகலா அவரை முதல்வராக நியமித்தது, பின்னர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முதல்வராக உயர்ந்தது, ஆகியவற்றை நினைவுகூர்ந்த ஓபிஎஸ், “ஜெயலலிதா மறைவுக்குப் பின் தர்மயுத்தத்தை ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு” என தெரிவித்துள்ளார்.

அவர், “நான் பழனிசாமியை ஆதரித்ததே அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு. நான்கரை ஆண்டுகள் அவரை ஆதரித்தேன். ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்தே என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தார்” எனக் கூறினார்.
ஓபிஎஸ், அதிமுகவில் தனது பணி நிறைவடைந்தது, ஜெயலலிதா தலைமையில் பல அமைச்சர்களை காப்பாற்றியதும், கட்சிக்காக உழைத்ததையும் நினைவுபடுத்தினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பத்தில், தர்மயுத்தம் தொடங்கியதுதான் தனது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என அவர் கூறியுள்ளார்.
தற்போது திமுகவில் இணைந்து, மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என பிரச்சாரத்தில் வலியுறுத்தி வரும் ஓபிஎஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.