மீண்டும் இணைந்து செயல்பட இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Aug 18, 2022 05:28 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

அந்த தீர்ப்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லது எனவும் பொதுக்குழுவும் செல்லாது எனவும், ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ் 

இந்த நிலையில் இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது.

மீண்டும் இணைந்து செயல்பட இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ் | Ops Called On Eps To Work Together Again

ஒருங்கிணைப்பாளர்கள் அதிமுக தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுவின் சட்டவிதி புதிய அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் முறைபடி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது.

கடந்தாண்டு டிசம்பரில் முறைப்படி தேர்தல் நடைபெற்றது, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக நானும், இபிஎஸ்-ம் தேர்ந்தெடுக்கப்பட்டோம். எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால் முந்தைய காலங்களில் திமுக ஆட்சியை பிடிக்கும் சூழல் இருந்தது.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பிற்கு ஏற்ப, கழகம் ஒன்றுபட வேண்டும்; ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கசப்புகளை மறந்த அனைவரும் ஒன்றுபட்டு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டதால் திமுக உருவானது அதன் பிறகு ஆளும் பொறுப்பை அதிமுக ஏற்றது. ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது.