கைதட்டுங்கண்ணே! பட்ஜெட் உரைக்கு இடையே கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

Parliament farmer edappadi
By Jon Mar 01, 2021 01:21 PM GMT
Report

இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருந்த போது, இடையில் கைதட்டுங்க அண்ணே என கைதட்டலை ஓபிஎஸ் கேட்டு வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்தும் அதற்கு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

அப்போது ஓரிருவர் மட்டுமே தங்களின் கைகளைத் தட்டிக் கரவொலி எழுப்ப, தன்னுடைய பேச்சை நிறுத்திய ஓபிஎஸ், கைதட்டுங்கண்ணே... கைதட்டுங்கண்ணே என்றார். உடனே எம்எல்ஏக்கள் பலரும் மேசையை தட்டி கரவொலி எழுப்பிய பின்னர், பட்ஜெட் உரையை தொடர்ந்தார் ஓபிஎஸ்.