சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தம்பி- அதிமுகவில் அடுத்தடுத்து நிகழும் திருப்பம்

admk ttvdinakaran opanneerselvam vksasikala oraja
By Petchi Avudaiappan Mar 04, 2022 09:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா சசிகலாவை சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தோல்வியை சந்தித்த அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதனால் மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.   இதனிடையே வி.கே.சசிகலா இரண்டு நாட்கள் ஆன்மீக பயணமாக தென்மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். 

நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் தொண்டர்களை மட்டுமே சந்திக்கவிருப்பதாகவும், எந்தவொரு ஆலோசனைக் கூட்டமோ, கட்சி சார்ந்த அலுவல் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் சசிகலாவை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரரான ராஜா சந்தித்து பேசினார். 

ஏற்கனவே  தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதேசமயம் இது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.