பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் - எந்த கட்சியுடன் கூட்டணி?
பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இனைந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த நிலையில், அவரை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த அவர், கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகல்
3 மணி நேரம் நடந்த ஆலோசனையில், மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதாக அறிவித்துள்ளார்.
மேலும், விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும், தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது எதிர்கால அரசியல் சூழல் குறித்து முடிவு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.