ஒரே அணியாக செயல்படுவோம்: கூட்டாக பேட்டியளித்த ஓபிஎஸ்-டிடிவி தினகரன்
ADMK
O. Panneerselvam
By Irumporai
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிடிவி ஓபிஎஸ் சந்திப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் இனி இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.
அதிமுகவை மீட்போம்
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து பணிபுரிய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீட்போம் என்றும் தெரிவித்தார்.