தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்கிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Tn government O panneerselvam
By Petchi Avudaiappan Jun 11, 2021 05:06 PM GMT
Report

தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டைவிட பின் தங்கிய மாநிலங்களான பீஹார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில்கூட 24%க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்தியதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 19% பேர் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவது தமிழ்நாட்டில்தான் சுணக்கம் இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.