தமிழ்நாடு வாழ்கவே...ஆளுநர் ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு

Government of Tamil Nadu R. N. Ravi Governor of Tamil Nadu Chennai
By Thahir Jan 09, 2023 04:46 AM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் வணக்கம் எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார். அப்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்கவே என கோஷம் எழுப்பினர்.

Opposition to Governor Ravi

அதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதிமுக.விசிக, பாமக உள்ளிட்ட கட்சியினை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.