மகள்களை தந்தையே திருமணம் செய்யலாம் - அரசு அனுமதிக்கு கிளம்பிய எதிர்ப்பு!
வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் சட்டம்
ஈரான் மிகவும் சிறிய நாடு. இந்த நாட்டின் அதிபராக மசூத் பெசெஷ்கியன் உள்ளார். ஈரான் நாட்டின் மக்கள்தொகை என்பது சுமார் 9 கோடி.
இந்த நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஈரானை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது என்பது மிகவும் குறைவு.
இதற்கிடையே தான் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க கடந்த ஆண்டு ஈரான் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகள்களை, அவர்களின் தந்தையே திருமணம் செய்து கொள்ள அந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது.
கடும் எதிர்ப்பு
தற்போது சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரான் இந்த புதிய சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஈரானை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஈரானில் மன்னராட்சி நடைபெற்றபோது பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது.
மேலும் விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள் பெற்றிருந்தனர். தற்போது பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என வருத்தம் தெரிவித்துள்ளனர்.