மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு

BJP Narendra Modi
By Fathima Apr 16, 2026 07:01 AM GMT
Report

அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அடிப்படை அரசியலமைப்பு தகர்த்து உரிமைகளை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு | Opposition To Constituency Delimitation Bill

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்துள்ளனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி நோட்டீஸ் வழங்கினார்.

தமிழகத்தின் நல்லிபாளையத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புகொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.