ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி

ADMK DMK Seeman Jallikattu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Aug 29, 2026 01:47 PM GMT
Report

opposition parties questions tvk-govt plans to ban jallikattu" தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளன.

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் உள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

2017 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, "அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு இருக்கிறது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

ரூ.50 கோடி நிதி இருந்திருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம், இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம்" என கூறினார்.

அவரது பேச்சுக்கு திமுக, அதிமுக, நாம்தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதிமுக கண்டனம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக, "தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. 

தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!

(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் விஜய் !)" என தெரிவித்துள்ளது.

திமுக கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக ஐடி விங் செயலளார் டி.ஆர்.பி.ராஜா, "தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா? 

ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா?

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?

தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா? 

ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், "ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், 

வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ கருப்பையா விளக்கம்

இதற்கு விளக்கமளித்துள்ள தவெக எம்.எல்.ஏ கருப்பையா, "ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன். 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி | Opposition Questions Tvk Govt Plan Ban Jallikattu

பாரம்பரியம் மாறாமல் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் வீரம். இவர்கள் அதை உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது.

நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.