எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்:மீண்டும் அதிமுக ஆட்சியே தொடரும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

election parliament dmk edappadi aiadmk
By Jon Apr 04, 2021 04:16 AM GMT
Report

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.மணி, மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, சேலத்தில் தான் அதிகமுரை ஓமலூருக்கு வந்துள்ளேன். மேலும் சேலம் மாவட்ட மக்களின் தேவைகளை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.

அவர்களுது தேவையை பூர்த்தி செய்வதே எனது கடமை. தற்போதுள்ளது போலவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.