மணிப்பூர் விவகாரம்...ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

Government Of India Draupadi Murmu Manipur
By Thahir Aug 02, 2023 09:13 AM GMT
Report

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் விவகாரம்  

மெய்தி மற்றும் குக்கி இன பிரிவுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வன்முறையில் இது வரையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் உச்சகட்டமாக கடந்த மே மாதம் 4-ஆம் தேதி, பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. இது குறித்தான வீடியோக்கள் வெளியாகி நாடெங்கும் பெரும் கண்டங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், பல எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களும் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

குடியரசு தலைவர்களுடன் எம்பிக்கள் சந்திப்பு 

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் நிலையை ஆராய எதிர்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் கடந்த 30-ஆம் தேதி மணிப்பூர் சென்றிருந்தனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட எம்.பி.க்கள் அம்மாநில கவர்னர் அனுசுயா உக்கேவையும் நேரில் சந்தித்தனர். டெல்லி திரும்பிய குழு தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

Opposition MPs met President Draupadi Murmu

மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதி திரும்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, விசிகவின் திருமாவளவன் ஆகியோரும் உடனிருந்தனர்.