எதிர்க்கட்சி தலைவராகும் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏவாக பதவியேற்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது.
66 இடங்களில் வென்ற அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான கடிதத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் நேற்று பேரவை செயலாளரிடம் அளித்தனர்.
இந்நிலையில் இன்று முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. முதல் நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.