எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு! அனுமதியின்றி நேற்று போராட்டம்!

protest admk eps fir file against dmk
By Anupriyamkumaresan Jul 29, 2021 07:02 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு! அனுமதியின்றி நேற்று போராட்டம்! | Opposite Party Eps Fir File For Protest

அதன்படி, சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.