மத்திய அரசை கண்டித்து செப்டம்பரில் நாடு தழுவிய போராட்டம் - எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

protest against plan opposite party union government
By Anupriyamkumaresan Aug 21, 2021 08:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

 காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்பில் வராத மக்களுக்கு மாதம் தோறும் 7,500 ரூபாய் உதவித் தொகை வழங்கவேண்டும் என்றும் தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய உணவு தானியங்கள் கொண்ட பையை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

மத்திய அரசை கண்டித்து செப்டம்பரில் நாடு தழுவிய போராட்டம் - எதிர்க்கட்சிகள் அறிவிப்பு | Opposite Parties Paln To Protest Against Uniongovt

பெட்ரோல், டீசல் மீதான அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ள கலால் வரியை திரும்பப் பெறவும் அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதுடன் உள்நாட்டிலும் உற்பத்தியை அதிகரித்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக விரைந்து செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன

 பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை திட்டத்தின் பணி நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.