நாடு புதிய உயரங்களைத் தொட்டு அவற்றையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது : பிரதமர் மோடி

Narendra Modi
By Irumporai Feb 13, 2023 05:34 AM GMT
Report

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்றுதொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது.

விமான கண்காட்சி

இந்த நிகழ்ச்சியினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் , இந்த நிகழ்ச்சியில் 80 க்கும் மேற்பட்ட நாடுகள் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விமான கண்காட்சியில் மொத்தம் 807 அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும், அவற்றில் 107 அரங்குகள் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் இந்தியா

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு புதிய உயரங்களைத் தொட்டு அவற்றையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றது புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கையை குறிக்கிறது. 2024-25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு என தெரிவித்துள்ளார்.