3 மாநிலங்களவை இடங்களை கைப்பற்ற திமுகவுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகதனித்து 124 தொகுதிகளில் வென்றுள்ளது.
இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் இந்த மூன்று இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மூன்று இடங்களையும் திமுக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு நடைபெற்றால் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்டிருக்கும் திமுக வெற்றி பெறும் என்றும்.
ஏற்கனவே திமுக கூட்டணி மக்களவையில் 38 உறுப்பினர்கள் இருப்பதால் தற்போது மாநிலங்களவையிலும் கூடுதலாக மூன்று உறுப்பினர்களை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.