வெளியான விருது பட்டியல் - அவார்டுகளை வென்று குவித்த "Oppenheimer"..!
நடைபெற்று வரும் Golden Globe விருதுகளில் ஹாலிவுட் சமீபத்திய மெகா ஹிட் படமான "Oppenheimer" அடுத்தடுத்து பல விருதுகளை வென்று குவித்துள்ளது.
Golden Globe
உலகில் மிக பெரிய சினிமா அங்கீகார விருது என்றால் அது Oscar தான். அந்த விருதிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் Hollywood'இன் மிக உயரிய விருது "Golden Globe". Hollywood Foreign Press Association சார்பில் நடக்கும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த வருடத்திற்கான Golden Globe விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "Oppenheimer" படம் அநேக விருதுகளை வென்று குவித்துள்ளது.
பட்டியல்
சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் என பல விருதுகளை அப்படம் வென்று குவித்து அசதியுள்ளது.
கோல்டன் குளோப் விருது முழு பட்டியல்
சிறந்த திரைப்படம் (டிராமா) - ஒப்பன்ஹெய்மர்
சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா) - லிலி கிளாட்ஸ்டோன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகர் (டிராமா) - சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்
சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த டிவி தொடர் (டிராமா) - சக்ஸசன்
சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) - தி பியர்
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்(இசை) - லுட்விக் யோரன்ஸோன் ஒப்பன்ஹெய்மர்
சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த பாடல் - ’வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி - பில்லீ எலீஷ்)
சிறந்த அனிமேஷன் படம் - ’தி பாய் அண்ட் தி ஹெரோன்
சிறந்த வசூல் சாதனை படம் - பார்பி