ஆபரேசன் கங்கா : உக்ரைனில் சிக்கிய 7 வது விமானமும் இந்தியா வந்தது

india ukrain operationganga russiaukrainecrisis
By Irumporai Mar 01, 2022 03:56 AM GMT
Report

ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். 

இந்த நிலையில், ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் இந்திய அரசு உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர். தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் மாலை சுமார் 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

இதேபோன்று, ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 7வது விமானம் 182 இந்தியர்களுடன் மும்பைக்கு புறப்பட்டது. எட்டாவது ஆபரேஷன் கங்கா விமானம் புதாபெஸ்டில் இருந்து புதுடெல்லிக்கு 216 இந்தியர்களுடன் புறப்பட்டது.

நம்முடைய மீதமுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்புடன் அழைத்து வரும்வரை பணிகள் தொடரும் என்று மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்

இந்த நிலையில், ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு இந்திய குடிமக்கள் 182 பேரை ஏற்றி கொண்டு 7வது விமானம் வந்தடைந்தது. இந்திய மாணவர்களை மத்திய மந்திரி நாராயண் ரானே வரவேற்றார்.