மீண்டும் தள்ளிப்போகின்றதா பள்ளிகள் திறப்பு ? - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை
பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் அலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
2023 -24 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒரு முறை மாற்றப்பட்டு வரும் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.