குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு!

By Swetha Subash May 27, 2022 01:11 PM GMT
Report

தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமையான இன்று காலை கல்லணையை வந்தடைந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு! | Opening Of Water For Cultivation From Kallanai

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.

அதன்படி காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 500 கன அடி, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு! | Opening Of Water For Cultivation From Kallanai

தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.