தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

Tamil nadu
By Thahir Oct 10, 2022 05:48 AM GMT
Report

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் மீண்டும் திறப்பு 

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் இன்று வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு செப்டம்பர் 30ல் முடிவடைந்ததை அடுத்து, அக்.1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு | Opening Of Schools After Quarterly Vacation

இந்த காலாண்டு விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டு உள்ளன.

இதில்,அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் எண்ணும், எழுத்தும் பயிற்சி நடக்கிறது.

இதனால், அரசு பள்ளிகளில் மட்டும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.