நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கை Stumping செய்த நடிகர் யோகி பாபு..!

Yogi Babu Dinesh Karthik Salem T.Natarajan
By Thahir Jun 23, 2023 06:56 PM GMT
Report

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளதை அடுத்து இன்று அதை தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு 

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கை Stumping செய்த நடிகர் யோகி பாபு..! | Opening Of Natarajan Cricket Stadium

நடராஜனின் பெற்றோர் முன்னிலையில்,இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார் இதில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி,எஸ்,கே சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தினேஷ் கார்த்திக்கை அவுட் செய்த யோகி பாபு 

இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் தினேஷ் கார்த்திக்கை Stumping செய்த நடிகர் யோகி பாபு..! | Opening Of Natarajan Cricket Stadium

மைதானத்தின் திறப்பு விழாவிற்கு பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் யோகி பாபு கிரிக்கெட் விளையாடினர். அப்போது தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த போது நடிகர் யோகி பாபு அவரை ஸ்டெம்பிங் செய்து அவுட் செய்தார்.