OPS யாருடன் கூட்டணி? அடுத்தகட்ட மூவ் என்ன?
எடப்பாடி பழனிசாமியை ஏற்கப்போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நடைபெற்றது.

இதில், நிர்வாகிகள் ஒவ்வொருரையும் தனித்தனியாக அழைத்து, யாருடன் இம்முறை கூட்டணி வைக்கலாம் என கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருதரப்பு திமுகவுக்கும் மற்றொரு தரப்பு தவெகவுக்கும் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாருடன் கூட்டணி?
தொடர்ந்து, மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தொடர் தோல்விகளால் அதிமுகவையே படுபாதாளத்தில் எடப்பாடி பழனிசாமி தள்ளியுள்ளதாகவும் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.

பின் எடப்பாடி பழனிசாமி ஒழிக என்ற முழக்கமும் கூட்டத்தில் எழுந்தது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடுக்கவுள்ள முடிவும்,
ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட திட்டத்தில் முக்கியமான அம்சமாக அமையும் என கூறப்படுகிறது.