ஊட்டி அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் விஜய் மெழுகு சிலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் மெழுகு சிலை
இந்த அருங்காட்சியத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், அன்னை தெரசா, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என 20க்கும் மேற்பட்டோரின் சிலைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.
ஊட்டியில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையால் மெழுகு சிலைகள் உருகாமல் திடமாக உள்ளன.
இதனால், ஊட்டி படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகளுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil