ஊட்டியில் வெளுத்து வாங்கும் கனமழை - கரைபுரண்டோடும் வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் மீண்டும் கனமழை கொட்டி வரவதால் கடும் குளிர் அங்கு நிலவி வருகிறது.
இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டில் கனமழை பெய்து வருவதால், அங்கு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, நடுவட்டம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, இதனால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. மழையால் ஏரி, குளங்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.