வரலாற்றில் இரண்டாவது முறையாக மூடப்பட்ட நீலகிரி தாவரவியல் பூங்கா
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் சுற்றுலா தலங்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனையடுத்து கொரோனா கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தங்களை கண்டு ரசிப்பார்கள்.
மேலும் வன விலங்குகளை காணவும் யானை சவாரி செய்யவும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு செல்லவும் ஆர்வம் காட்டி வருவார்கள்.

தற்போது புதிய கட்டுப்பாடுகளால் இன்று முதல் உதவி அரசு தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் முதுமலை புலிகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கால்பதித்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைவதோடு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சுற்றுலா மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil