உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ப்ளூ டீ..!

greentea bluetea
By Petchi Avudaiappan Sep 15, 2021 05:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

வழக்கமாக நம் வாழ்வில் தற்போது டீ, காபி போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தையே மாற்றி கொண்டு க்ரீன் டீ, லெமன் டீ என அதன் பல்வேறு வகைகளையும் உடல் நலம் பேண நாம் குடித்து வருகின்றோம்.

உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும் க்ரீன் டீ, உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியே தள்ளி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. இதைப்போலத்தான் ப்ளூ டீயும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது

இதனை செய்ய கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ ப்ளூ டீயைபருகலாம்.

இது தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கவும்,, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாகவும் செய்கிறது. 

கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ளவர்களுக்கு ப்ளூ டீ  பெரிதும் உதவியாக இருக்கிறது.இந்த வகை டீ அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது.