இந்த இந்திய மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் : WHO எச்சரிக்கை
By Irumporai
இந்தியாவை சேர்ந்த இரண்டுவகையான இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 19 குழந்தைகள் பலியாகினர். மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.