எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர்கள் யார்?
MGR
Tamil Nadu
ADMK
Jayalalitha
By mohanelango
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது.
75 இடங்களில் அதிமுக கூட்டணி வென்றது. அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதகிருஷ்ணன் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற சான்றிதழ்களை வைத்தும் மலர் துவியும் மரியாதை செய்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் வேறு யாரும் அவர்களின் தலைவர்களின் சமாதிக்கு தற்போது வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.