‘‘தவறு செய்தவர்கள் தான் பயப்படவேண்டும் நான் ஏன் பயப்படணும்’’ - புகார் குறித்து முன்னாள் அமைச்சர் விளக்கம்
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி புகாரளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடோடிகள் படத்தில் நடித்திருந்த திரைப்பட நடிகை சாந்தினி. முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது இவர் வைக்கும் பகிரங்க பாலியல் குற்றச்சாட்டுகள் தான்,தற்போதைய பரபரப்புக்குக் காரணம்.
தன்னை காதலித்த மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தாகவும்.
தான் 3 முறை கருவுற்ற நிலையிலும், வலுக்கடாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதோடு, தனதுஅந்தரங்கபுகைப்படங்களில் வெளியிடப்போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விளக்கத்தில் .
நடிகை சாந்தினியை யார் என்றே தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
மேலும் ,அந்த பெண் பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். '
தன்னிடம் . 3 கோடி ரூபாய் கொடு. 2 கோடி ரூபாய் கொடுஎன பேரம் பேசியதாக கூறும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும். நான் ஏன் பயப்பட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன என்பது? காவல்துறையின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.