இனி டீச்சர் என்று தான் கூப்பிடனும்; சார், மேடம் எல்லாம் இல்ல - அரசு அதிரடி முயற்சி!
சார் அல்லது மேடம் என்பதற்குப் பதிலாக ஆசிரியர், டீச்சர் என்று அழைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலின சமநிலை
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஒலசேரியில் உள்ள பள்ளியில் , மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை இனிமேல் 'சார்' அல்லது 'மேடம்' என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதன்படி, டிசம்பர் 1, 2021 முதல் ஆசிரியர்களை வெறும் 'டீச்சர்' என்று அழைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அந்த முன்னெடுப்பை உதாரணமாக வைத்து தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாலின-நடுநிலை பெயர்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்குமாறு பொதுக் கல்வி இயக்குநரிடம் ஆணையக் குழு கேட்டுக் கொண்டது.
புதிய முயற்சி
இது குறித்து கல்வியாளர் பிரிஜித் பிகே கூறுகையில், “பாலின-நடுநிலை சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு ஒரு நேர்மறையான நடவடிக்கை. இப்போது நம் அன்றாட வழக்கத்தில் 'சார்' என்பது ஆண்பால் என்றும் 'டீச்சர்' என்பது பெண்பால் என்றும் பார்க்கப்படுகிறது.
அதை மாற்றி அனைவரையும் டீச்சர் என்று அழைப்பது பாலின சமநிலையை உருவாகும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.