கொரோனாவால் ஒரே கிராமமே தடை செய்யப்பட்டுள்ளது...எங்கு தெரியுமா?

covid people village Dindigul
By Jon Apr 08, 2021 04:53 PM GMT
Report

கொரோனா பாதிப்பு காரணமாக திண்டுக்கல்லில் ஒரு கிராமமே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் தற்போது கொரோனாவின் பரவல் சிறுவர்களிடம் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.