அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் ரயில்! எங்கு தெரியுமா?

Train
By Manchu Feb 03, 2026 06:30 PM GMT
Report

இந்தியாவில் சச்கந்த் விரைவு ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகின்றது. இதுகுறித்த விபரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரயிலில் இலவச உணவு

இந்தியாவில் மகாராஷ்டிரா நன்டட் பகுதியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிருதசஸ் செல்லும் சச்கந்த் விரைவு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சீக்கிய மதத்தினரின் முக்கியமான வழிபாட்டு தலங்களான ஹசூர் சாஹிப் மற்றும் பொற்கோவிலை இணைக்கும் வகையில் 2000 கி.மீற்றர் தொலைவிற்கு இந்த ரயில் இயக்கப்படுகின்றது.

அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் ரயில்! எங்கு தெரியுமா? | Only One Train Alone For Passengers Free Foods

எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பயணிகள் இருக்கும் இடத்திற்கு அவர்களுக்கான உணவு வந்துவிடுமாம். சுத்தமான முறையில் நல்ல சத்தான காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவினை ரயில்வே துறையினர் வழங்குவதில்லை.

குருத்வாரா மற்றும் தன்னார்வ அமைப்பினால் இந்த உணவு வழங்கப்படுகின்றது. ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள குருத்வாராக்களில் தயாரிக்கப்படும் உணவினை டப்பாவில் அடைக்கப்பட்டு ரயில் நிலையங்களில் வைத்து தன்னார்வலர்களால் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் ரயில்! எங்கு தெரியுமா? | Only One Train Alone For Passengers Free Foods

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர்

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர்

என்னென்ன உணவுகள் கொடுக்கப்படுகின்றது?

கிச்சடி, பருப்பு, ரொட்டி, காய்கறி என சீரான உணவுகள் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளுக்கு மெனுவின் அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது.

ரயிலில் பயணிக்கும் அனைத்து மத மக்களும் எந்தவொரு பாகுபாடின்றி இந்த உணவினை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பசி இல்லாமல் மகிழ்ச்சியுடன் பயணிகள் பயணிக்கின்றனர்.

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

ஒவ்வொரு மத அமைப்புகளும், தன்னார்வலர் குழுக்களும் இணைந்து, இந்த சமுதாயத்தின் தேவையை தீர்ப்பதில் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை பறைசாற்றுவதாக, உணவு வழங்கப்படுவது பார்க்கப்படுகிறது. மேலும் உணவினை வாங்கிக் கொள்ளும் மக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தவறாமல் கூறவும் செய்கின்றனர்..

அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் ரயில்! எங்கு தெரியுமா? | Only One Train Alone For Passengers Free Foods