ஒரே ஒரு தல தோனியா? அப்ப அஜித் யாரு ? - தனுஷை வச்சி செய்யும் அஜித் ரசிகர்கள் !
தலன்னா அது தோனிதான் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தற்கு அஜித் ரசிகர்கள் தனுஷை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
னா படத்தில் இருந்து நடிகர் அஜித்தை ‘தல’ என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் தல என்றால் அது தோணி தான் என்பது நாம் அறிந்ததே.
அதே சமயம் சினிமாவில் தல அஜித் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் தோனி ரசிகர்களுக்கும் அஜித் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் எழுவது உண்டு. ஒரே ஒரு தலதான் அது எங்க தலதான் என்று இரு ரசிகர்களும் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வாக்குவாதம் வருவது எப்போதும் நடக்கும்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில்: சிஎஸ்கே வெற்றியினை கொண்டாடும் வகையில் ஒரே தலன்னா அது தோனிதான் என தெரிவித்திருந்தார் அவ்வுளவுதான அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா? ட்விட்டரில் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
நடிகர் தனுஷ், சிஎஸ்கே வீரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, ஒரே ஒரு தல அது தோணி என்று சொல்லிவிட்டார். அவர் தல தோணி என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை.
ஒரே ஒரு தல அது தோணி தான் என்று சொல்லிவிட்டதால், தல அஜித் ரசிகர்கள் வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.